
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'டிசி' திரைப்படம், வெளியான 8 நாட்களில் உலகளவில் 70.23 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
நேற்று மட்டும் 2.86 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், இந்த வார இறுதிக்குள் 90 முதல் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷாலின் 'மகுடம்' படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 40 லட்சம் ரூபாய் மட்டுமே ஈட்டிய நிலையில், 'டிசி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.