
நாமக்கல் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் மிக அரிய உலோகமான பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாக கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு துறை கண்டறிந்தது.
இதைத் தொடர்ந்து கருங்கல்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களில் இந்திய புவியியல் ஆய்வு துறை மற்றும் தமிழ்நாடு கனிமவளத் துறை இணைந்து சுமார் 6 ஆண்டுகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.
இந்த இடம் 4,800 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாக உள்ள நிலையில், சுரங்கம் அமைப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.