
2026-ல் விஜய் முதல்வராவார் என்று கணித்தது போலவே, 2029-ல் தமிழகத்தில் இருந்து பிரதமர் வருவார் என்றும், ராகுல் காந்தி விஜயை பிரதமராக்குவார் என்றும் தவெக எம்எல்ஏ கனிமொழி தெரிவித்துள்ளார்.
தவெக-காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தால் மோதல் நீடிக்கும் நிலையில், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் ஊழலற்ற ஆட்சிக்காக காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது.