
மாருதி சுஸுகி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த வாகன விநியோகம் 25 சதவீதம் அதிகரித்து 2.76 லட்சம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.
பயணிகள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதுடன், ஏற்றுமதியும் 59 சதவீதம் அதிகரித்து 49,872 வாகனங்களாக உயர்ந்துள்ளது.