
அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல்களை எளிதில் தேடக்கூடிய வடிவத்தில் வழங்கும் முடிவுக்கு மக்களின் போராட்டங்களே காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், 13 கோடிக்கும் அதிகமானோரின் வாக்குரிமையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள எஸ்ஐஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.