
கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்து கடந்த ஏப்ரல் மாதம் திருப்பி அனுப்பியுள்ளது.
திட்ட அறிக்கையில் நீர்த் தேக்கத் திறன் கணக்கீடுகள் முறையாகச் செய்யப்படாதது மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக இல்லாதது ஆகிய இரு முக்கிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையான திருத்தங்கள் மற்றும் கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், திருத்தங்களுடன் மீண்டும் அறிக்கையைத் தாக்கல் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.