
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க, அனைத்துக் கடைகளிலும் ரசீது வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், கூட்டத்தை முறைப்படுத்த காவலர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தினார்.
டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ரசீது வழங்குவதில் சிரமம் இருப்பதாக வாதிடப்பட்ட நிலையில், சூப்பர் மார்க்கெட்டுகளைப் போல ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.