
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மங்கள் ரங்' பாடல் இணையத்தில் விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளானது.
இதுகுறித்து பேசிய நடிகர் ரன்பீர் கபூர், மக்கள் ஏதாவது சொல்வது அவர்கள் வேலை என்றும், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.