
குஜராத்தில் ஜூன் கடைசி வாரம் முதல் பரவி வரும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வருவதாகவும், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
1965-ல் மகாராஷ்டிராவின் சண்டிபுரா கிராமத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.