புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில், பள்ளியில் படிக்கும் 5 சிறுமிகளில் ஒருவருக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 4,000 மாணவிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மாதவிடாய் தள்ளிப்போவது மட்டுமே பிஎம்ஓஎஸ் (PCOS) நோய்க்கான அறிகுறி கிடையாது என்றும், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியே தீர்வு என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.