
கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 54 வயது பெண்மணி, செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம் மூலம் சுமார் 22 ஆண்டுகளாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட சொந்தக் கருவைக்கொண்டு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த தங்கள் 21 வயது மகனின் நினைவாகவும், வாழ்க்கைக்கு புதிய தொடக்கத்தை வழங்கவும் இந்த முடிவை அத்தம்பதியினர் எடுத்தனர்.
கிரீஸ் நாட்டின் தனியார் மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் நாட்டின் IVF வயது வரம்பு குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.