ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ள நிலையில், துபாய் மக்களுக்கு தேசிய அவசரநிலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பு கடலில் சுட்டு வீழ்த்தியதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் ஈரான் மேற்கொண்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 16 அன்று காலாவதியான நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.