
காவிரி நதிநீர் விவகாரத்தில் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சந்திக்க அஞ்சும் தவெக அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட மறுப்பதன் மூலம் தங்களின் தயக்கத்தை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி அமைப்பதற்காக தவெக தரப்பினர் பல தில்லுமுல்லுகளைச் செய்துள்ளதால், திமுக மற்றும் அதிமுக தலைவர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் பயப்படுவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.