
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 55.42 வினாடிகளில் இலக்கை எட்டிய வித்யா, பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால தேசிய சாதனையை சமன் செய்தார்.
அவர் மகளிர் 400 மீ ரிலே பிரிவில் தங்கமும், கலப்பு ரிலே பிரிவில் வெள்ளியும், தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலமும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.