/polimer-news/media/media_files/2026/09/18/vlcsnap-2026-09-18-10h50m40s673-2026-09-18-10-50-56.png)
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் தரப்புடன் நேரடியாகப் பேசியுள்ளதாகவும், போர் முடிவை நோக்கிச் செல்வதாகவும் வட கரோலினாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரான் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தீவிரமாக உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை உறுதிப்படுத்தினார்.
நியூயார்க்கில் வரும் 22-ஆம் தேதி ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில், வளைகுடா நாட்டுத் தலைவர்களுடன் போருக்குப் பிந்தைய உத்திகள் குறித்து டிரம்ப் விவாதிக்கவுள்ளார்.