
சளி, காய்ச்சல் போன்ற சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுயமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர் நவீன் எச்சரித்துள்ளார்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகள் 10 சதவீத மக்களுக்கு மட்டுமே பயன் தருவதாகவும், வைரஸ் காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமே போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம் என்றும், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது தொற்று நோயைத் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.