சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகளை விமர்சிப்பவர்கள் அவற்றுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கே.ஆர்.எம். றிஷாட் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். ஸபீஸ், சம்மாந்துறையில் டெங்கு இல்லை எனக் கூறி டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மாணவர்களின் கல்வி மற்றும் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வுகளை அரசியல் விவாதங்களாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.