
இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை அடிக்கடி மாற்றுவது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கையை அடியோடு உடைத்துவிட்டதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் வைபவுக்கு குறைந்தது 3 போட்டிகளிலாவது தொடக்க வீரராக வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 247 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.