
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்யா தனது போரில் கானா, நேபாளம், இந்தியா உள்ளிட்ட 47 நாடுகளின் குடிமக்களை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்த 47 நாடுகளின் பிரதிநிதிகளிடம், ரஷ்யா உங்கள் மக்களுக்கு என்ன செய்கிறது என்பதை அறிந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.