
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் செஞ்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ள நீரில் சென்று ரீல்ஸ் போடுவதை நிறுத்திவிட்டு, மழலைகளின் பாதுகாப்பினை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம் இதுவரை என்னவென்றே தெரியாமல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.