
பருவமழை சரியாக பெய்யாததால் தானியங்களின் விளைச்சல் குறைந்து, பருப்பு வகைகள் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அனைத்து வகையான அரிசியும் கிலோவுக்கு 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
எல் நினோ பாதிப்பால் மழை பொய்த்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.