
வங்கிகளிடம் உள்ள அதிகப்படியான பணப்புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இதுவே ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய அரசு பத்திர விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.5 லட்சம் கோடி வரை அரசு பத்திரங்கள் விற்கப்படலாம் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.