
மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே நேரத்தில் காணப்பட்ட வீடியோவால், அவர்கள் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இருவரும் ஒன்றாகப் பேசுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இல்லாத நிலையில், இது தொழில்முறை சந்திப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
33 வயதான மிருணாள் தாகூர் மற்றும் 24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே உள்ள 9 வயது வித்தியாசம் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இருவரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.