
சென்னை பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் 1,200 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், வீட்டுவசதி, வருவாய் துறைகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலகம் கட்டினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்புகளும், த.வெ.க. கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் மீனவ அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஓரிரு நாளில் அழைத்து பேச்சு நடத்த உள்ள நிலையில், இக்கூட்டத்திற்குப் பின் திட்டம் தொடருமா அல்லது ரத்தாகுமா என்பது தெரியவரும்.