
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள 'பெயிரென் யிசுவாங்' சர்வதேசக் கண்காட்சி மையத்தில் 2026 உலக ரோபோ மாநாடு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இதில் 20-க்கும் மேற்பட்ட புதிய வகை மனித உருவ ரோபோக்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நுட்பமான சென்சார்கள் உதவியுடன் மனித உருவ ரோபோக்கள் கிட்டார் வாசித்து அசத்தின, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.