
விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ஏராளமான தொழில்முனைவு வாய்ப்புகள் இருப்பதாக பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் டி.கே.கணேஷ் அனவரதம் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களது புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி புத்தாக்கத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அரை அளவிலான மாதிரி விழாவில் திறந்து வைக்கப்பட்டது.