
தையல் நூல் உற்பத்திக்கான மூலப்பொருளான 'பாலியெஸ்டர் ஸ்டேபிள் பைபர்' விலை கடந்த இரண்டரை மாதங்களில் கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இருந்து பெங்களூரு, சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு மாதம் 20,000 டன் வரை தையல் நூல் விற்பனை நடக்கும் நிலையில், முக்கியமான சாயம் விலையும் 80 சதவீதம் உயர்ந்துள்ளது.
மூலப்பொருளின் அசாதாரண விலை உயர்வால் ஒரு கோன் (100 கிராம்) தையல் நூல் 46 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.