Education
கேரளாவில் சாலை விபத்து: திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

கேரளாவில் சாலை விபத்து: திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

minnambalam1h
THE BRIEF
1

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு நடந்த சாலை விபத்தில், திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.

2

மாணவர்கள் சென்ற கார், சாலைப் பணிகள் நடைபெற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின் பகுதியில் அதிவேகமாக மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

3

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.