
கோவையில் பல ஆண்டுகளாக ஏழைகளுக்கு வெறும் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் கமலாத்தாளுக்கு தனியார் நிறுவனம் வழங்கி வந்த இலவச சமையல் எரிவாயு உருளைகள் கடந்த 2 மாதங்களாக சரியாகக் கிடைக்கவில்லை.
இதையடுத்து விறகு அடுப்பில் சமையல் செய்து சிரமப்பட்ட பாட்டி, கியாஸ் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளித்தார்.
செய்திகள் வெளியானதை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்பேரில் கமலாத்தாளுக்கு இன்று முதல் தடையின்றி கட்டணமில்லா சிலிண்டர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.