
வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது; அதிகபட்சமாக பிசா 50 ரன்கள் எடுத்தார்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணியில் பிரதிகா ராவல் சதமும் (100* ரன்கள்), ஷபாலி வர்மா அரைசதமும் (64* ரன்கள்) விளாசி அணியை வெற்றி பெறச் செய்தனர்.