
நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் செய்யும் திட்டம் கொச்சி மாநகரில் அமல் செய்யப்பட உள்ளது.
கேரள போலீசார் கொச்சியைச் சேர்ந்த 'ஐ ஹப் ரோபோடிக்ஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
வானிலை மற்றும் நீண்ட நேரப் பணியால் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இது சோதனை முறையில் பயன்படுத்தப்படும்.