
வடகொரியாவில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் நிலையில், வெப்ப சோர்வைத் தவிர்க்க பாரம்பரிய நாய் கறி சூப் அருந்துமாறு அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
மாரடைப்பு மற்றும் தைராய்டு போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் மீன் கஞ்சி போன்ற உணவுகளுடன் நாய் கறி சூப்பையும் சேர்த்துக்கொள்ளுமாறு தொழிலாளர் கட்சியின் நாளிதழ் அறிவுறுத்தியுள்ளது.
தென்கொரியா நாய் கறி விற்பனைக்குத் தடை விதித்து 2027 பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த அறிவுறுத்தல் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.