
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் IFHRMS இணையதளம் மூலம் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது.
பல்வேறு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, கடந்த ஆண்டுக்கான சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை அரசு மேலும் 2 மாதம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஊழியர்கள் 2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை டிசம்பர் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம் எனவும், தவறினால் நன்னடத்தை விதியை மீறியதாக கருதப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.