ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 தங்கம் உட்பட மொத்தம் 85 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தை பிடித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துப் பாராட்டினார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நம்பகமான நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுத் துறைக்கான கட்டமைப்பை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளதாகவும், தற்போது வெளிப்படையான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.