/nakkheeran/media/media_files/2026/09/15/tambaram-corporatiom-tn-govt-2026-09-15-23-14-25.jpg)
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரும் முன்பே அழகுபடுத்துதல் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்ட விவகாரத்தில் ஆணையர் எஸ். பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி நிகழ்வில் பணியாணை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து எந்தச் செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
செயல்முறை குறைபாடுகளுக்காக தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.