
திண்டுக்கல் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 10-வது டிஎன்பிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது, இதில் ஷிவம் சிங் அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்துவீச்சாளர்களான அபிஷேக் மற்றும் அஸ்வந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், வெற்றிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.