Health & Environment
இமயமலை பனிப்பாறைகள் உருகுவதற்கு சுற்றுலாப் பயணிகளின் சிறுநீர் காரணம்: ஆய்வு

இமயமலை பனிப்பாறைகள் உருகுவதற்கு சுற்றுலாப் பயணிகளின் சிறுநீர் காரணம்: ஆய்வு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் திறந்தவெளியில் கழிக்கும் சிறுநீர், பனிப்பாறைகளின் வெப்பநிலையை உயர்த்தி அவை வேகமாக உருகுவதற்குக் காரணமாக இருப்பதாக Regional Environmental Change இதழ் எச்சரித்துள்ளது.

2

சிறுநீரில் உள்ள யூரியா, அம்மோனியா மற்றும் சோடியம் உப்புக்கள் பனியின் கட்டமைப்பைச் சிதைப்பதுடன், நீர்நிலைகளில் கலந்து குடிநீரின் தரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

3

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் வெள்ளத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.