
இந்திய நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பங்களிப்பு 34.6 சதவிகிதமாக உயர்ந்துள்ள போதிலும், உயர் நிர்வாகப் பதவிகளில் அது 16.7 சதவிகிதமாகக் சரிந்துள்ளது.
அவதார் மற்றும் செமௌண்ட் இணைந்து நடத்திய 2026-ஆம் ஆண்டுக்கான 'Best Companies for Women in India' ஆய்வறிக்கை இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிப் பாதைகளே பெண்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.