
சென்னையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெய்த 30 செ.மீ. கனமழையால் வீடுகள் மற்றும் சாலைகளில் நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடசென்னையில் மேக வெடிப்பை நினைவூட்டும் வகையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததுடன், பல இடங்களிலும் மின் தடை ஏற்பட்டது.
வானிலை ஆய்வு மையம் எச்சரித்த 12 செ.மீ.-ஐ தாண்டி 30 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளதுடன், இன்றும் பல மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.