
அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான ‘பிரேக்கிங் பேட்’டில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஆர்.ஜே. மிட் தனது 34-வது வயதில் காலமானார்.
இத்தொடரில் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட 'வால்டர் ஒயிட் ஜூனியர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் சர்வதேச அளவில் பிரபலமானார்.
நடிப்பைத் தாண்டி மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டார்.