
சென்னை பாடிகுப்பத்தில் கூவம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் என். ஆனந்த், கடும் போக்குவரத்து நெரிசலால் தவெக நிர்வாகியின் பைக்கில் நிகழ்ச்சி இடத்திற்குச் சென்றார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.
காரைத் தவிர்த்து பைக்கில் வந்த அமைச்சர், கூவம் ஆற்றுப் பகுதியில் இறங்கி பணிகளின் நிலவரத்தை ஆய்வு செய்தார்.