
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர்.
அதிகாலை 7:43 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க ஒரே நேரத்தில் 12 கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.