
பெங்களூருவில் நடைபெற்ற துலீப் டிராபி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தெற்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கேப்டன் திலக் வர்மா முதல் இன்னிங்சில் சதமும் (117 ரன்), இரண்டாவது இன்னிங்சில் அரை சதமும் (51 ரன்) அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியை தெற்கு மண்டலம் எதிர்கொள்கிறது.