
பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய BMW i5 LWB மின்சார காருக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், இதன் விலை ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
81.6 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 699 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு வசதி மற்றும் 12.3 இன்ச் ஓட்டுநர் டிஸ்ப்ளே உள்ளிட்ட நவீன அம்சங்களுடன், 99 கார்கள் மட்டுமே முதல் கட்டமாக விற்பனைக்கு வருகின்றன.