
தாய்லாந்தில் உள்ள எக்கமாய் இண்டர்நேஷனல் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் தமிழ் மாணவி கீதா, சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கல்வியில் 3.93 தரப் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததற்காக, தாய்லாந்து கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய தூதரிடம் இருந்து பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுள்ளார்.
சரவணன் அழகப்பன் - தையல்நாயகி தம்பதியின் மகளான கீதா, தாய்லாந்து தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.