
அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும் தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்போம் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, ஹார்முஸ் ஜலசந்தி அருகே புதிய தடை செய்யப்பட்ட கடல் மண்டலத்தை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மண்டலத்திற்குள் ஈரானின் அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.