Technology
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்

Dinamalar2h
THE BRIEF
1

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.950 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்தை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

2

ஏவுதளத்தை நிர்வகிக்கும் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ரூ.3,500 கோடி வருவாய் ஈட்டியிருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3

இந்த ஏவுதளம் மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவதுடன், எஸ்.எஸ்.எல்.வி. மற்றும் தனியார் நிறுவனங்களின் விக்ரம்-1, அக்னிபான் ராக்கெட்டுகளை நேரடியாக விண்ணில் ஏவ முடியும்.