நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னாவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் யாதவ் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், ஜன்சக்தி ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப், நேற்று இரவு 7.30 மணிக்கு ஷாப்பிங் மாலில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
போராட்டத்தின் போது தடியடி, கல்வீச்சு மற்றும் போக்குவரத்து போலீஸ் பூத் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.