
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக ஜவுளி கொள்முதலை நிறுத்தியுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 190 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கியுள்ளன.
சென்னிமலை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தயாரிக்கும் பெட்ஷீட், போர்வை மற்றும் ஜமக்காளம் போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி ஜவுளி ரகங்கள் குறித்த தவறான புரிதலால் கொள்முதலை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.