
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, பட்டாசு ஆலை உரிமம் வழங்குவதில் ஊழல் ஒழிக்கப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா பேசியது தி.மு.க.வினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
முந்தைய ஆட்சியில் உரிமம் பெற 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்ட நிலையில், தற்போது 177 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் குறித்த கருத்துக்கு செங்கோட்டையன் விளக்கம் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டத்தின் கடுமை குறித்தும் விபத்துகள் தொடர்வது குறித்தும் கேள்வி எழுப்பினார்.